Saturday, 8 August 2015

காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதியின் வீடு பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதியின் வீடு பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பஸ் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி தப்பி விட்டான். பின்னர் அவன் காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் புகுந்து 3 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தான். பின்னர் நடந்து துப்பாக்கி சண்டைக்கு பின் அவனை பிடித்த ராணுவத்தினர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவனது பெயர் முகமது நவீத் (22) என தெரியவந்தது. பாகிஸ்தானில் பைசலாபாத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் முகமது யாகூப். இவருக்கு முகமது நவீத் உள்பட 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இவனது வீடு பைசலாபாத் ரபிக் காலனியில் உள்ளது. சகோதரர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகவும், ஒருவர் மளிகை வியாபாரமும் செய்கின்றனர். இந்த தகவல்கள் நவீத்திடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

No comments:

Post a Comment