Sunday 9 August 2015

ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதான பல் ஒன்று கண்டுபிடிப்பு

தென்மேற்கு பிரான்ஸில் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதான பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மனிதனின் பரிணாம வளர்ச்சியிலுள்ள இடைவெளி ஒன்றை நிரப்ப, இந்தப் பல் உதவக்கூடும் என்று அகழ்வாராயச்சி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கோரைப் பல், முழுமையாக வளர்ந்த மனிதர் ஒருவரின் எச்சங்களில் இருந்து கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு பல்லின் ஜோடியாகும். எனினும் இப்போது கணெடுக்கப்பட்டுள்ள இந்தப் பல் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு மேலான காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் வம்சாவளியில் வாழ்ந்த மனிதரது பல்லாக இந்தப் பல் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. புவி மிகவும் குளர்ந்திருந்த காலப்பகுதியில் வாழ்ந்திருந்த அந்த மனிதர் குதிரைகளையும், கண்டாமிருகங்களையும் வேட்டையாடினர் என்றும் எண்ணப்படுகிறது. அராகோ குகையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் உதவி செய்துவந்த தன்னார்வ இளைஞர் ஒருவரால் அரிதான இந்தப் பல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்தக் குகை, வரலாற்று காலத்திற்கு முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்த மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.


ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதான பல் ஒன்று கண்டுபிடிப்பு

No comments:

Post a Comment